கம்பம் கிராம சாவடி தெருவில் கிராம அலுவலகம் அருகே தண்ணீர் தொட்டி உள்ளது. ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் மோட்டார் பழுதானதையடுத்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை, இதனால் அப்போது மக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் மோட்டாரை சரி செய்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.