பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், பாலையூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் பொதுமக்களுக்கு பெரும் தொல்லை கொடுத்து வருகிறது. குறிப்பாக ஓட்டு வீடுகளில் ஓடுகளைப் பிரித்து உள்ளே சென்று உணவுப் பொருட்களை சூறையாடி வருகிறது. மேலும் வீட்டின் அருகே உள்ள வாழை மரங்களை வளர விடாமல் குருத்துகளை கடித்து குதறி விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இங்குள்ள குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.