நொய்யல் ஆற்றின் கம்பி வேலியை சேதப்படுத்தும் ஆசாமிகள்

Update: 2025-03-23 10:22 GMT


திருப்பூரின் இதயமாக ஓடுவது நொய்யல் ஆறு. இந்த ஆற்றில் சாக்கடை நீரும், சாயக்கழிவு நீர் செல்கிறது. மேலும் குப்பைகளையும் அங்கு கொட்டி குப்பை தொட்டி ஆக்கினார்கள். அதை தடுக்கும் பொருட்டு ஆற்றின் கரையோரம் கம்பி வேலி அமைக்கப்பட்டது. ஆனால் அந்தகம்பி வேலியை உடைத்து உள்ளே நுழைந்து குப்பைகளை கொட்டுகிறார்கள். எனவே குப்பை கொட்டுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


மேலும் செய்திகள்