திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் தழுகை ஊராட்சிக்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்திற்குள் ரூ.66,700 மதிப்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து விளையாட்டுகளும் விளையாடும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள நெடு நாட்களாக உள்ள மைதானத்தில் புதிதாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற விளையாட்டுகள் விளையாட முடியாமல் இளைஞர்கள் தவித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.