திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம் அப்பநல்லூர் ஊராட்சிட்சிக்கு உட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் இந்த சுகாதார நிலையத்தில் கடந்த ஓராண்டிற்கு மேல் ரத்த பரிசோதனை கருவி பழுதடைந்து உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள கர்ப்பிணிகள், முதியவர்கள், நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.