அன்னவாசல் அருகே உள்ள பரம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். தற்போது நெல் வரத்து அதிகரித்துள்ள நிலையில் பரம்பூரில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் நெல்மணிகளை திறந்த வெளியில் குவித்து வைத்துள்ளனர். எனவே பரம்பூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.