புதுக்கோட்டை மாவட்டம் பழைய ஆதனக்கோட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முன்பு பழுதடைந்த நிலையில் இருந்த பயணிகள் நிழற்குடையை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை அங்கு புதிதாக பயணிகள் நிழற்குடை கட்டப்படாமல் உள்ளது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் பொதுமக்கள் வெயில், மழையில் நின்று பஸ் ஏற வேண்டிய அவல நிலை உள்ளது. ஆகையால் பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக புதிதாக பயணிகள் நிழற்குடை கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.