புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பஸ் நிலையத்தில் தினமும் 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் பஸ் நிலையம் வந்து செல்கின்றனர். ஆனால் பஸ் நிலையத்தில் இலவச கழிவறை வசதி இல்லை. இதனால் பெண்கள், முதியவர்கள், மாணவ- மாணவிகள் என பலரும் அவதிப்படுகின்றனர். இதனால் சிலர் திறந்த வெளியிலேயே இயற்கை உபாதைகளை கழிக்கும் சூழல் உள்ளது. எனவே கறம்பக்குடி பஸ் நிலையத்தில் இலவச கழிவறை வசதி செய்து கொடுக்க வேண்டும்.