புதுப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகம் பழுதடைந்ததால் இடித்து அகற்றப்பட்டு தற்போது தனியார் இடத்தில் செயல்பட்டு வருகிறது. இதனிடையே அப்பகுதியில் புதிதாக சார் பதிவாளர் அலுவலகம் கட்டப்பட்டது. இருப்பினும் நீண்ட நாட்களாக சார் பதிவாளர் திறக்கப்படாமல் காட்சி பொருளாக இருந்து வருகிறது. எனவே அலுவலகத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.