ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாபட்டியில் கழிப்பறை வசதி இல்லை. இதனால் பெண்கள், குழந்தைகள் பொதுவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேரத்தில் பொதுவெளியை கழிப்பறையாக பயன்படுத்த பெண்கள் அச்சப்படுகின்றனர். எனவே தங்கச்சியம்மாபட்டியில் கழிப்பறை வசதியை ஏற்படுத்தி கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.