கடலூர் அருகே வடக்குத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சுமார் 8 மாதங்களாக ஊராட்சி செயலாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதன் பொறுப்புகளை தற்போது இந்திரா நகர் ஊராட்சி செயலாளர் கூடுதலாக கவனித்து வருகிறார். இதனால் வடக்குத்து பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து புகார்கள் தெரிவிக்க பொதுமக்கள் நீண்ட தொலைவில் உள்ள இந்திராநகருக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.