குறிஞ்சிப்பாடி அருகே வெங்கடாம்பேட்டையில் கால்நடை துணை மருந்தக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், தற்போது பலத்த சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் சேதமடைந்த கால்நடை துணை மருந்தக கட்டிடத்தை அகற்றிவிட்டு அதற்கு பதில் புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.