சேத்தியாத்தோப்பில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இவைகள் அங்குள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை சூறையாடிச் செல்கிறது. மேலும் சாலையில் செல்லும் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகளை சில நேரங்களில் கடிக்க பாய்கின்றன. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.