ஊத்துக்குளி அருகே வடுகபாளையம் கிராமம் கே.கே. நகர் பகுதியில் குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகள் உள்ள இடத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தது. டாஸ்மாக் கடை இங்கு வந்தால் விவசாய நிலத்தில் வீசி எறியப்படும் பாட்டில்களால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே டாஸ்மாக் மதுபான கடை அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என அப்பகுதியில் விளம்பர பதாகை வைத்துள்ளனர்.