சுடுகாட்டுப்பாதை ஆக்கிரமிப்பு

Update: 2025-02-09 12:46 GMT

வந்தவாசி தாலுகா மழையூர் கிராமத்தில் சுடுகாட்டுப் பாதையை ஆக்கிரமித்து தகர சீட் போட்ட கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக விவசாய நிலங்களுக்கு செல்வோர், மேய்ச்சலுக்கு கால்நடைகளை ஓட்டிச் செல்வோர் அவதிப்படுகின்றனர். மேலும் டிராக்டர்கள், அறுவடை எந்திரம் போன்றவைகள் செல்ல முடியாமல் சிரமமாக உள்ளது. நிலங்களில் மகசூலான தானியங்களை வீட்டுக்கு கொண்டு வர முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு சுடுகாட்டுப் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற நம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கங்கன், மழையூர். 

மேலும் செய்திகள்