நடைமேம்பாலத்தில் கேமரா

Update: 2022-09-24 16:26 GMT

நடைமேம்பாலத்தில் கேமரா

திருப்பூரில் வாகனங்களின் இயக்கம் அதிகளவில் உள்ளதால் நகரில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி, வாகன நெருக்கடி அதிகளவில் இருந்து வருகிறது. இதனால் காலை, மாலை நேரங்களில் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்லக்கூட வசதி இல்லாமல் அவதிப்படுகிறார்கள். இதனால் பாதசாரிகள் வசதிக்காக திருப்பூர் ரெயில் நிலையம் சந்திப்பு, பார்க் ரோடு, புஷ்பா ரவுண்டானா ஆகிய இடங்களில் நடைமேம்பாலம் அமைக்கப்பட்டது. இது தற்போது பயன்பாட்டில் உள்ளது. ஆனால் சில நேரங்களில் குடிமகன்கள் ஆங்காங்கே அமர்ந்து மது குடிப்பதும், காலிபாட்டில்களை அங்கேயே போட்டு செல்வதும் பாதசாரிகளை முகம் சுழிக்க செய்கிறது. சமூக விரோதிகளும் இரவில் அங்கு படுத்துகிடக்கிறார்கள். இதை தடுக்க மேம்பாலங்களுக்கு கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

வின்சென்ட், திருப்பூர் 95008 17499

மேலும் செய்திகள்