கோவை மாநகராட்சி 48-வது வார்டு சி.கே. காலனியில் இறைச்சி கழிவுகள் சாலையோரம் வீசப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சாலையோரம் இறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.