புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியில் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஊனையூர் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த பயணிகள் நிழற்குடை மேற்கூரை இன்றி காணப்படுவதினால் இப்பகுதி மக்கள் மழையிலும், வெயிலிலும் நின்று பஸ் ஏறி பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.