நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பட்டத்தையன்குட்டையில் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளது. இதன் அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தின் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து சேதமடைந்து காணப்படுகிறது. எனவே விபத்து ஏதும் ஏற்படும் முன் கிராம நிர்வாக அலுவலக கட்டிட மேற்கூரையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுப்பராயன், பட்டத்தையன்குட்டை, நாமக்கல்.