கால்வாயில் அடைப்பு

Update: 2022-08-15 15:05 GMT

கோவை மாநகராட்சி 65-வது வார்டு என்.ஜி.ஆர். 2-வது வீதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. இங்கு அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. அதில் புழு உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் கூறியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அடைப்பை நீக்கி சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்