சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 20 ஊராட்சிகள் உள்ளன. இதில், ஒரு லட்சம் பேர் வசித்து வருகின்றனர். ஒன்றியத்தில் இறப்பவர்களை மின்சார எரியூட்டும் மயானத்தில் எரிக்க தொலைவில் உள்ளதிருப்பூர், கோவை, பொள்ளாச்சி போன்ற ஊர்களுக்கு சிரமத்துடன்கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே, ஒன்றியத்தில் ஏதாவது ஒரு இடத்தில் மின்சார எரியூட்டும் மயானம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.