பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகம்
பல்லடம், கரடிவாவி ஊராட்சி, இந்திரா நகரில் பொதுசுகாதார வளாகம்(பொதுகழிவறை) இருந்தும் பயனின்றி உள்ளது. ஆண்கள் ,பெண்கள், குழந்தைகள் என அனைவரும் சாலையோரங்களிலும், தண்ணீர் தேங்கும் குளங்களிலும் சுகாதாரமற்ற முறையில் திறந்த வெளியில் இயற்கை உபாதையை கழிக்கும் அவலம் உள்ளது. பொதுசுகாதார வளாக கட்டிடம் பராமரிப்பின்றி கதவுகள் உடைபட்டு, பொது சுகாதார வளாகத்தை சுற்றி குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. ஆகவே கரடிவாவி ஊராட்சி நிர்வாகம் இதனை கவனத்தில் எடுத்து பொதுசுகாதாரவளாகத்தை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
ர.மணிகண்டன்,பல்லடம்.
9578441037