புதுக்கோட்டை-திருச்சி சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே வாகனங்களில் வேகத்தை குறைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையின் நடுப்பகுதியில் இரண்டு இடங்களில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.