இடையூறாக உள்ள பயணிகள் நிழற்குடை

Update: 2022-08-07 14:14 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம் முக்கண்ணாமலைப்பட்டி பஞ்சாயத்தில் புதிய அரசினர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள இடத்தில் சுற்றுச்சுவருக்கு இடையூராக பாழடைந்த பயன்பாட்டில் இல்லாத பயணிகள் நிழற்குடை ஒன்று உள்ளது. அதனை அகற்றி அந்த இடத்தை பள்ளி பயன்பாடுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். காரணம் அந்த பயனற்ற நிழற்குடையில் மதுபிரியர்கள் மற்றும் சமூக விரோதிகள் மது அருந்தவும், சட்ட விரோத செயல்களுக்கும் பயன்படுத்துகின்றனர். இதனால் மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகின்றனர். ஆகவே அந்த இடத்தை இடித்து அப்புறப்படுத்தி பள்ளிவசம் கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்