தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்

Update: 2022-08-07 14:07 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அக்ரஹாரம் பகுதியில் அனுமார் கோவில் எதிரே அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 120 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். அருகிலேயே அங்கன்வாடி மையம், வட்டார வளமையம் போன்றவையும் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடங்கள் அனைத்தும் அனுமார் கோவில் குளத்தின் கரையில் அமைந்துள்ளன. பாதுகாப்பற்ற இந்த குளத்தின் கரையில் மழை காலங்களில் சிறு குழந்தைகள் மிக அச்சத்துடன் பள்ளிக்கூடம் சென்று வருகின்றனர். அறியா பருவத்தில் உள்ள குழந்தைகள் ஒடி விளையாடும்போது குளத்தில் தவறிவிழ வாய்ப்பு உள்ளது. மேலும் மழை காலத்தில் குளத்தின் கரை சேறும், சகதியுமாக மாறுவதால் மாணவ-மாணவிகள் நடந்து செல்ல பெரும் சிரமபடுகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் குளத்தின் கரைகளில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்