கோவை அரசு ஆஸ்பத்திரி சுற்றியுள்ள சாக்கடை கால்வாய் சரியாக தூர்வாரப்படாததால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் எலி தொல்லைகள் அதிகமாக உள்ளது. இவை இரவு நேரங்களில் வெளியே சுற்றித்திரிகின்றன. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே எலி தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன், கோவை.