திருப்பூர் பல்லடம் ரோட்டில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையில் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் சரியான பராமரிப்பின்றி உள்ளது. இதன் காரணமாக ஒரு இருக்கை உடைந்து போய், அதில் அமரக்கூடிய பகுதியானது தரையை நோக்கி சாய்ந்து நிற்கிறது. இதனால் இதில் யாரும் அமர முடியாத நிலை இருப்பதால் இங்கு வரும் பயணிகள் போதிய இருக்கை வசதியின்றி கால் கடுக்க காத்து நிற்க வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே காட்சி பொருளாக உள்ள இந்த இருக்கையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.