புதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டில் இருந்து புளிச்சங்காடு, கைகாட்டி செல்லும் நெடுஞ்சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள மண் திட்டுகளால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அதனை சரி செய்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி 'புகார் பெட்டி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.