புதுக்கோட்டையில் இருந்து அரிமளம் செல்லும் சாலையில் டைமன்நகர் பகுதியில் அந்தோணியார் சர்ச் அருகே குரங்குகள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. அவை கதவுகள் திறந்திருக்கும் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை எடுத்துக்கொண்டு ஓடி விடுகின்றன. யாராவது தடுக்க வந்தால் மிகப்பெரிய அளவில் இருக்கும் குரங்குகள் அவர்களை தாக்குவதற்கு முற்படுகிறது. எனவே பெண்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்தும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.