திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் சின்னசாமி அம்மாள் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகில் அம்மா உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்தின் முகப்பு பகுதியில் உள்ள இரும்பு கதவை தாங்கி நிற்கும் சிமெண்டு தூண் உடைந்த நிலையில் உள்ளது. இது எப்போது வேண்டுமானாலும் கீழே விழக்கூடிய வகையில் சாய்ந்து நிற்பதால் இங்கு உணவருந்த வரும் பொதுமக்கள் அச்சம் கொள்கின்றனர். எனவே விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த ஆபத்தான சிமெண்டு தூணை இடித்து விட்டு புதிய தூண் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?.