புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பெரிய கடைவீதி பின்புறம் குண்டுகுளம் உள்ளது. இந்த குளத்தில் அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் தற்போது குளம் குப்பை மேடாக மாறி உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசி வருவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குளத்தை சுற்றி நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.