தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2022-08-02 16:56 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் சிவன் கோவில் அருகே உள்ள குளம் குப்பைகள் நிறைந்தும், படித்துறைகள் அசுத்தமாக கிடப்பதாகவும், இன்று (புதன்கிழமை) நடைபெறும் ஆடிப்பெருக்கை கொண்டாடும் விதமாக கோவில் குளத்தை சுத்தம் செய்து தர வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குளத்தை சுத்தம் செய்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்