புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் வடக்கு நகரம், சன்னதி சாலையில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை உள்ளது. அந்த நிழற்குடை மிகவும் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதேபோல் கீரமங்கலம் வடக்கு கொத்தமங்கலம் ரோட்டில் உள்ள நிழற்குடையின் முன்பக்க தூண்கள் அடிப்பகுதியை சாலை விரிவாக்கம் செய்ய தோண்டிய போது உடைத்துள்ளதால் எப்போது சாயும் என்ற ஆபத்தான நிலையில் உள்ளது. இதன் அருகே பொதுமக்கள் செல்லும்போது இந்த இந்த நிழற்குடை இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.