புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், நாகுடி ஊராட்சி மாணவநல்லூர் கிராமத்தில் சுமார் 25-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 1990-ம் ஆண்டு அரசின் மூலம் இலவசமாக தொகுப்பு வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது. அதன்பிறகு மராமத்து பணிகள் செய்யப்படாமல் உள்ளதால் தற்போது மேற்கூரைகள் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே ஏதேனும் விபரீதம் ஏற்படும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.