அசுத்தமான கோவில் குளம்

Update: 2022-07-31 13:34 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் சிவன் கோவில் அருகில் உள்ள குளம் மிகவும் அசுத்தமான நிலையில் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. வருகிற ஆடி 18-ந்தேதி சுற்றுவட்டார பெண்கள் இந்த குளத்தின் படித்துறையில் கூடி ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடுவது வழக்கம். ஆனால் குளத்தில் உள்ள நீர் மற்றும் படிக்கட்டுகள் அசுத்தமடைந்து உள்ளன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த குளத்தை தூய்மைபடுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்