புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், திருவாப்பாடியில் இருந்து காரக்கோட்டை சாலையில் கலக்கமங்கலம் கீல்பாதியில் பாலம் கட்டுவதற்காக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பணி தொடங்கப்பட்டது. திருவாப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் அதேபோன்ற காரக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளிக்கு செல்லக்கூடிய சாலை, பாலத்திற்காக ஓரத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் வாகன ஓட்டிகள், மது பிரியர்கள் இரவு நேரங்களில் அந்த இடத்தில் விழுந்து விடுகிறார்கள். ஊருக்குள் வந்துபோன ஒரே ஒரு பஸ்சும் கடந்த 8 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.