புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, எண்ணை கிராமத்திற்கு உட்பட்ட காட்டுசோலை குளத்தில் உள்ள 3 மடைகளும் பழுதடைந்து தண்ணீர் நிரம்பி செல்கிறது. மேலும் இந்த குளம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களாகவே காட்சி அளிக்கின்றது. மழைநீர் செல்லக்கூடிய வரத்துவாரிகள் முழுவதும் புதர் மண்டியுள்ளதால், ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மழை பெய்யும்போது மழைநீரை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.