தினத்தந்திக்கு நன்றி

Update: 2022-07-28 13:19 GMT

புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் அன்னவாசல் பேரூராட்சி அலுவலகம் அருகே சாலையின் குறுக்கே உள்ள பாலத்தின் ஓரங்களில் சாலை அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகனங்கள் இரவு நேரங்களில் சாலையோரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் சிக்கிக்கொள்கின்றன. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாலையோரம் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர் என தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையோரம் இருந்த பள்ளங்களை சரி செய்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்