திருப்பூர் என்பது குட்டி இந்தியா. இங்கு அனைத்து மாநிலத்தவரும் வசிக்கிறார்கள். பனியன் தொழிலும் சிறந்து விளங்குகிறது. இரவு பகல் என 24 மணிநேரமும் சாலையில் வாகனம் செல்லாத நொடியில்லை. ஆனால் இங்கு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மேம்பாலம் கட்டப்படவில்லை. கோவையில் பார்க்கும் இடமெல்லாம் மேம்பாலம். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் குறைய வ ாய்ப்பு உள்ளது. எனவே கோவையை போன்று திருப்பூரிலும் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும்.
-------------