திருப்பூர் கோர்ட்டு வீதி டி.எம்.எப். மேம்பாலம் முதல் குமரன்ரோடு வரை காங்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் செல்லும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் போர் விமானத்தில் செல்வதுபோல் அதிவேகமாக செல்கிறார்கள். அந்த சாலையில் நடந்து செல்வோரை மனிதான அவர்கள் மதிப்பது இல்லை. எனவே அசம்பாவிதம் நடக்கும் முன்பு அந்த சாலையில் வேகத்தடை அமைத்தால் நன்று.