செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட காட்டாங்கொளத்தூர் மாதா கோவில் தெருவில் இயங்கி வந்த துணை ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. இதனால் இப்பகுதிக்கு வரும் செவிலியர்கள் துணை சுகாதார நிலையத்தில் அமர்ந்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் பள்ளிக்கூடங்கள் தெருவோரங்களில் அமர்ந்து பணி செய்து வருகின்றனர். எனவே பழுதடைந்த துணை ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டிடங்களை சரி செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.