புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள கோவில் கோபுரங்கள், அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் பறவைகளின் எச்சங்களில் இருந்து முளைக்கும் ஆலமரம், அரச மரக்கன்றுகள் உடனுக்குடன் அகற்றப்பதாததால் மரங்களாக வளர்ந்து கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு உடைந்து சேதமடைந்து வருகிறது. இதேபோல கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள சுமார் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர்தேக்கத் தொட்டியில் பல ஆண்டுகளாக ஆலமரக்கன்று வளர்ந்து வருவதால் தண்ணீர் தொட்டி சேதமடையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.