கோபி தெப்பக்குளம் ரோட்டில் இருந்து பஸ் நிலையம் செல்லும் ரோட்டில் கீரிப்பள்ளம் ஓடை உள்ளது. இதில் செடிகள் அதிகமாக வளர்ந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்வதற்கு மிகவும் தடையாக இருக்கிறது. மேலும் அதிகமாக துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகம் சுழித்தவாறு செல்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து ஓடையில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?