நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த தொப்பப்பட்டி கிராமத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் இல்லை. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் கடும் சிரமப்படுகின்றனர். இதுபற்றி புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. மாணவர்களின் எதிர்கால நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும்.
-சின்னதுரை, தொப்பப்பட்டி, நாமக்கல்.