புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.பங்களா குளம், சிவன் கோவில் குளம், அனுமார் கோவில் குளம், ராட்டினா குளம், குட்டைக்குளம், புதுக்குளம், உள்ளிட்ட நீர் நிலைகள் உள்ளன. ஆனால் இந்த நீர் நிலைகளுக்கு தண்ணீர் செல்லும் வரத்து வாரிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் நல்ல மழை பெய்தாலும் குளங்களுக்கு தண்ணீர் செல்வது இல்லை, இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவருகிறது.வரத்து வாரிகளில் தண்ணீர் செல்லாததால் சாலைகளில் மழைநீர் தேங்கி சுகாதாரகேடு உருவாகிறது. எனவே கறம்பக்குடி பகுதியில் மழைநீர் வடிகால்களை சீரமைத்து குளத்திற்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.