வடக்கன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள பயணிகள் நிழற்கூடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் அங்கு குப்பைக்கூளமாகவும், புதர்மண்டியும் கிடக்கிறது. இதனால் நிழற்கூடத்துக்கு பொதுமக்கள் செல்லாமல் வெளியிலே நின்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே சேதமடைந்த பயணிகள் நிழற்கூடத்தை அகற்றி விட்டு, புதிதாக கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.