திருச்சி மாவட்டம், குழுமணி அருகே உள்ள பேரூர் கிராமத்தில் சாலை ஓரத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த சாலையானது குழுமணி முதல் உறையூர் மெயின் சாலையாகவும் மிக முக்கியமானதாக உள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் நூற்றுக்கணக்கானவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், பூ மார்கெட்டிற்கு பூக்களை கொண்டு செல்லும் விவசாயிகள் என பலதரப்பினர் சென்று வருகின்றனர். இந்த டாஸ்மாக் கடைக்கு வரகூடியவர்கள் கொண்டு வரகூடிய இரு சக்கர வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு செல்வதால் வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே செல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. சிலர் மது போதையில் மது பாட்டிலை சாலையில் உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.