கம்பம் பிரதான சாலைகளில் தினமும் 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்களை துரத்திச்சென்று அச்சுறுத்துகின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை நகராட்சி அதிகாரிகள் பிடித்து அகற்ற வேண்டும்.