பாழடைந்த வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம்

Update: 2022-07-20 16:58 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் திருக்குளக்கரை பகுதியில் அங்கன்வாடி கட்டிடம் உள்ளது. இங்கு தினமும் 20-க்கும் சிறுவர்-சிறுமிகள் வந்து படித்து வருகின்றனர். இந்த கட்டித்தின் அருகே ஏற்கனவே செயல்பட்டு வந்த வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து கிடக்கிறது. இதனால் அதிகமான பாம்பு மற்றும் விஷ ஜந்துகள் சுற்றிதிரிகிறது. இதனால் குழந்தைகள் அச்சத்துடேன அங்கன்வாடியில் படித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கன்வாடி அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்