திருப்பூர்- மங்கலம் ரோடு கோழிப்பண்ணை பகுதியில் உள்ள நிழற்குடை பராமரிப்பின்றி விடப்பட்டுள்ளதால் மேற்கூரை பெருமளவில் சேதமடைந்து காணப்படுகிறது. ஆங்காங்கே சிமெண்டு காரைகள் பெயர்ந்து உள்ளே இருக்கும் இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் உள்ளே நிற்பதற்கு பயணிகள் அச்சம் கொள்கின்றனர். எனவே ஆபத்தான வகையில் உள்ள நிழற்குடையை சீரமைத்து பயணிகளுக்கு பயன்படும் வகையில் செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
-------------